நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையும், அரசின் ஊழல் குற்றச்சாட்டுக்களும் காரணமாக தொடங்கிய இளைஞர் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில், போராட்டக்காரர்கள் நேபாள பாராளுமன்றக் கட்டடத்தையும், அமைச்சரவைக் கட்டடங்களையும் தீ வைத்ததோடு, பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் தனிப்பட்ட இல்லத்திற்கும், பல அமைச்சர்களின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன.
மேலும் அரசு அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன.
பாராளுமன்ற கட்டடத்துக்கு தீ வைத்ததையடுத்து பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேபாளம் தலைநகர், காத்மாண்டு பள்ளத்தாக்கு முழுவதும் அதிகரித்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) முழுமையாக மூடப்பட்டுள்ளது.
கோதத்தார் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துக்கள், மோசமடைந்து வரும் விமானப் பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றுடன், மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக திரிபுவன் சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விமான நிலையத்திற்கு பாதுகாப்பை வழங்க நேபாள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
.jpg)
.jpg)



.jpg)
No comments:
Post a Comment