வைத்தியசாலையில் தண்டனையை கழித்ததை ஏற்க முடியாது : தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு சிறை அனுபவிக்க உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 9, 2025

வைத்தியசாலையில் தண்டனையை கழித்ததை ஏற்க முடியாது : தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு சிறை அனுபவிக்க உத்தரவு

தாய்லாந்து உச்ச நீதிமன்றம், முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவிற்கு ஒரு வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

2023 முதல் 2024 ஆம் ஆண்டின் ஆரம் கட்டம் வரை பொலிஸ் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்தமையானது, தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவின் சிறைத் தண்டனையின் ஒரு பகுதியாகக் கருதப்படுமா என்பது தொடர்பான வழக்கின் அடிப்படையில் இன்று (09) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமது பதவிக் காலத்தில் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், 76 வயதான தக்சின் சினவத்ரா 2023 ஆம் ஆண்டில் 8 வருட சிறைத் தண்டனைக்கு உள்ளானார். 

அவர் 15 ஆண்டு கால நாடு கடத்தல் வாழ்க்கைக்குப் பின்னர் தாய்லாந்திற்கு திரும்பியிருந்த நிலையில் இச்சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து மன்னரின் உத்தரவின் பேரில் அவரது தண்டனை ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டு, வயது காரணமாக அவர் முன்கூட்டியெ விடுவிக்கப்பட்டார்.

ஆனாலும், அவருக்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனையையும் மீறி, தக்சின் ஒரு நாள் கூட சிறைச்சாலைக்குள் செல்லாமல் உடல்நலக் காரணங்களைக் காட்டி அவர் பொலிஸ் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விடயத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைய அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் விடுதலை செய்யப்படலாம் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பானது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இதற்கு முன்னர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் மருத்துவமனையில் தொடர்ச்சியாக இருந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டமையானது, ஒரு இரவைக் கூட சிறையில் கழிக்காமையானது நீதிக்கு ஏற்பட்ட இழுக்காக கருதப்பட்டது.

ஆயினும் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு அவர் ஆட்சியில் இருந்தபோது செய்த குற்றங்களுக்கு ஏற்ற ஒரு நியாயமான தண்டனையாக மக்களால் பார்க்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment