அண்மையில் வெளியான வைத்தியத் துறைக்கான (MBBS) இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகளில் கடுகண்ணாவையைச் சேர்ந்த M.Y. சாஜித் அஹமத் அகில இலங்கையில் 4 ஆம் இடத்தைப் பெற்று தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
இவர் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் சாதாரண தரப் பரீட்சை வரை கற்று, கண்டி தர்மராஜ கல்லூரியில் உயர் தரத்தை கற்றார். அதன் பின்னர் களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.
இவர் ஓய்வுபெற்ற கிராம சேவை அதிகாரி ஜனாப் மொஹம்மத் யாசின் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை சித்தி மர்ஜான் தம்பதியரின் இளைய மகனாவார்.
வெளிநாடுகளில் மருத்துவத்துறை கற்கையை மேற்கொண்டு போட்டிப்பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மருத்துவத்துறை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களையும் வைத்தியர் சாஜித் அஹமத் நடாத்தி வருகிறார்.
(நுஸ்கி முக்தார்)
No comments:
Post a Comment