டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மூவரும் கேகாலை - ரன்வல பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேகநபர்களிடம் இருந்து 12,400 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பல கஜமுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்கள் கேகாலை மற்றும் வெலிஓய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்களில் ஒருவர் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைத்து கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment