அலி ரொஷானுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை : மேலதிகமாக 2.06 பில்லியன் ரூபா அபராதம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 19, 2025

அலி ரொஷானுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை : மேலதிகமாக 2.06 பில்லியன் ரூபா அபராதம்

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு ரூ. 2.06 பில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், குறித்த யானையைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சபுவித மற்றும் லங்கா ஜயரத்ன ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய 3 பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யவும் அமர்வு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment