40 தங்க பிஸ்கட்களுடன் இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது - News View

About Us

About Us

Breaking

Friday, September 19, 2025

40 தங்க பிஸ்கட்களுடன் இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி கைது

ரூ. 20 மில்லியனுக்கும் (ரூ. 2 கோடி) அதிக பெறுமதியுள்ள 550 கிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படையில் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 37 வயதான சந்தேகநபர் நேற்று (18) 550 கிராம் எடையுள்ள 40 தங்க பிஸ்கட்களை (ஒவ்வொன்றும் 10 கிராம் மற்றும் 20 கிராம்), இடுப்பில் மறைத்து மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் (staff gate) வழியாக கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 24 கெரட் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூ. 20 மில்லியனுக்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடலை ஸ்கேன் மூலம் சோதனை செய்த போது இந்த தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் சுங்கம் மேலும் தெரிவித்தது.

மேலும் எந்தவொரு தனிநபரும், அவரது பதவி எதுவாக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல எனவும், வலியுறுத்தியது.

No comments:

Post a Comment