“ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நாளை (10) மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணி வரை நடத்துவதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
விவாதத்தின் பின்னர் பி.ப 3.30 மணிக்கு சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.30 மணி வரை “விவசாயிகளுக்கு உத்தரவாத விலையை வழங்க வேண்டும் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்” என்பது தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை குறித்த விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலத்தின் இண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த விவாதத்தை பிறிதொரு தினத்தில் நடத்த இணக்கம் காணப்பட்டது.
குறித்த சட்டமூலத்திற்கான திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு மேலதிக காலம் தேவைப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார இங்கு தெரிவித்தார். இதனைக் கருத்தில் கொண்டு குழு மேற்கண்ட தீர்மானித்திற்கு வந்தது.
.jpg)
No comments:
Post a Comment