ஆப்கான் நில நடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு : 3,124 பேர் காயம் : 5,412 வீடுகள் சேதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 2, 2025

ஆப்கான் நில நடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு : 3,124 பேர் காயம் : 5,412 வீடுகள் சேதம்

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.

ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​டது. இதில் பாகிஸ்​தான் எல்லை​யில் உள்ள ஆப்கனின் கிராமங்​கள், பல மாடி கட்​டிடங்​கள் சரிந்து விழுந்​தன. 

ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நில நடுக்​கம் ஏற்​பட்​ட​தாக அமெரிக்க புவி​யியல் ஆய்வு மையம் தெரிவித்​துள்​ளது. குணார் மாகாணத்​தின் நூர் கால், சாவ்​கி, வாட்​பூர், மனோகி மற்​றும் சபா தாரா பகு​தி​களில் வீடு​கள், கட்​டடங்​கள் நொறுங்கிய​தால் உயி​ரிழப்பு அதி​கரித்​துள்​ளது.

குழந்​தைகள், பெண்​கள், முதி​ய​வர்​கள் என ஏராள​மான மக்​கள் இடிபாடு​களில் சிக்​கி​னர். ஞாயிற்​றுக்​கிழமை இரவு 11.47 மணி​யள​வில் முதல் நில நடுக்​கம் 6.0 ரிக்​டர் அளவுக்கு ஏற்பட்​டது. அதை தொடர்ந்து சில நிமிடங்​களில் 4.5 ரிக்​டர் அளவில் மீண்​டும் நிலநடுக்​கம் ஏற்பட்டது. 

ஆப்​கானிஸ்​தானில் ஏற்​பட்ட நில நடுக்​கம் தொடர்​பான சிசிடிவி காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. நில நடுக்​கத்​தில் பல கிராமங்​கள் இருந்த வீடு​கள், பல மாடி கட்​டடங்​கள் மண்​ணோடு மண்​ணாக சரிந்​துள்​ளன.

நில நடுக்க பாதிப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், “குணார் மாகாணத்தின் நுர்கல், சவ்கே, சாபா தாரா, பெச் தாரா, வாடாபூர், அசதாபாத் மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,124 ஆக உள்ளது. 5,412 வீடுகள் இடிந்துள்ளன.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹெலிகொப்டர்கள் தரையிறங்க முடியாத இடங்களில் கமாண்டோ படைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment