பலஸ்தீன இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ள பெல்ஜியம், இஸ்ரேல் மீது உறுதியான 12 தடைகள் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் பிரீவோட் ஐ.நா. அமர்வில் பலஸ்தீன் பெல்ஜியத்தால் அங்கீகரிக்கப்படும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான தடைகள் விதிக்கப்படும்’ என்று எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டார்.
பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த பெல்ஜியத்தின் திட்டங்கள், எதிர்வரும் 09 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையும் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் பொது கொள்முதல் கொள்கைகளை மறுஆய்வு செய்தல்களும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை காசாவில் இருந்து கடைசி பணயக் கைதி விடுவிக்கப்பட்ட பின்னரே பலஸ்தீன அங்கீகாரம் முறைப்படுத்தப்படும் என்றும், பலஸ்தீனத்தை நிர்வகிப்பதில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா
No comments:
Post a Comment