CID இல் முன்னிலையானார் ரணில் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

CID இல் முன்னிலையானார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜராகியுள்ளார்.

தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைய, வாக்குமூலம் பெறுவதற்காக ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு பயணம் செய்த வேளையில், அரச நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சிஐடி வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment