இரவாகியும் நீதிமன்றில் நீடிக்கும் ரணிலுக்கான பிணை வழங்கல் ! - News View

About Us

About Us

Breaking

Friday, August 22, 2025

இரவாகியும் நீதிமன்றில் நீடிக்கும் ரணிலுக்கான பிணை வழங்கல் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கல் இரவாகியும் நீதிமன்றத்தில் நீடிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு பயணம் செய்த வேளையில், அரச நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது.

குறித்த பிணை தொடர்பில் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் தீலிப்ப பீரிஸ் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து தற்போது இரவு 9.40 மணி வரை குறித்த பிணை வழங்கலில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சிறிது நேரம் மின் தடை ஏற்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில், எதிர்ப்பை வெளிப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாமல் ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, நிமலான்சா, அநுர பிரியதர்சன யாப்பா, கபீர் காஷிம், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, அலி சப்ரி, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களுடன் பல ஆதரவாளர்களும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் குழுமியுள்ளனர்.

அந்த வகையில் இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட  முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

No comments:

Post a Comment