கைது செய்ய சென்ற வேளையில் சூடு : சந்தேகநபர் பலி : கைக்குண்டு வீச்சினால் STF வீரர் காயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

கைது செய்ய சென்ற வேளையில் சூடு : சந்தேகநபர் பலி : கைக்குண்டு வீச்சினால் STF வீரர் காயம்

சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற வேளையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை, சூரியவெவ வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான சந்தேகநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒரு விசேட அதிரடிப் படை அதிகாரியும் காயமடைந்து சூரியவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் இரண்டு சந்தேகநபர்கள் இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டின்போது ஒரு சந்தேகநபர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் வீசிய கைக்குண்டு காரணமாக விசேட அதிரடிப்படை அதிகாரி காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சந்தேக நபர், கொஸ்கொடவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment