பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கிடையாது : தபால்மா அதிபர் இறுக்கமான அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கிடையாது : தபால்மா அதிபர் இறுக்கமான அறிவிப்பு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்த சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் ரூ. 140 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தபால்மா அதிபர் தெரிவித்தார்.

இருப்பினும், மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில், “சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும். வேலை நிறுத்தத்தின்போது சம்பளக் கொடுப்பனவுகளுக்கு நிதி விடுவிக்கப்படாது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடமைக்குத் திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கடமைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்றார்.

No comments:

Post a Comment