ஆதரவற்ற இளைஞர், யுவதிகளுக்கு வீட்டு வசதிக்கு நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 19, 2025

ஆதரவற்ற இளைஞர், யுவதிகளுக்கு வீட்டு வசதிக்கு நிதியுதவி

நிறுவனங்களின் பாதுகாப்பிலிருந்து சமூகமயப்படுத்தப்படுகின்ற இளைஞர் யுவதிகளுக்கான வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 13 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பாதுகாப்பு வழங்கப்படுகின்ற சிறுவர்களை சமூகமயப்படுத்தும் போது திருமண எதிர்பார்ப்புடன் இருக்கின்ற இளைஞர் யுவதிகள், அதற்கான முறையான வகையில் தயார்படுத்தும் நோக்கில் நிரந்தரமானதும், பாதுகாப்பானதுமான வீடொன்றை அமைப்பதற்கு இயலுமாகும் வகையில் ரூ. 1 மில்லியன் நிதியுதவி வழங்குவதற்காக 2025 வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூ. 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பணிக்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம், மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம், அபிவிருத்தி நிதித் திணைக்களம், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களை ஒருங்கிணைத்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய அடையாளம் காணப்பட்டுள்ள அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு கீழ்வரும் குழுக்களுக்கு நிதியுதவியை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18 வயது பூர்த்தியடைந்தமையின் அடிப்படையில் கடந்த 10 வருட காலத்தில் (2015.06.30 திகதிக்கு) பின்னர் நிறுவன ரீதியான பாதுகாப்பிலிருந்து விடுபட்டு திருமணமாகியிருக்கின்ற அல்லது திருமண எதிர்பார்ப்புடன் இருக்கின்ற ஆனாலும் நிரந்தரமான பாதுகாப்பான வீடொன்று இல்லாத இளைஞர் யுவதிகள்.

தகுந்த குடும்பப் பின்னணி அல்லது வாழ்வாதாரம் இன்மையால் தொடர்ந்தும் சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கின்ற 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர் யுவதிகள். (விசேடமாக பெண்கள்)

No comments:

Post a Comment