தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் கடந்த 17 ஆம் திகதியுடன் இரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு சமுகமளிக்குமாறு தபால்மா அதிபர் ருவன் சத்குமார அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளார்.
சுகயீனம் காரணமாக விடுமுறையிலிருக்கும் ஊழியர்கள் அதனை உறுதிப்படுத்த அரச மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உரிய அனுமதியில்லாமல் கடமைக்கு வராத ஊழியர்களுக்கு ஒகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதற்கு எந்த நிதியும் விடுவிக்கப்படமாட்டாது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் நடைமுறை விதிகளின் ஓஏ ஆம் பிரிவின் விதிகளுக்கு அமைவாக, ‘தாமே பதவியை கைவிட்டவர்கள்’ என்று கருதப்படுவார்கள் என தபால்மா அதிபர் ருவன் சத்குமார அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment