தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாவிலிருந்து அதிகரிக்கப்படும் என சபை முதல்வரும், போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) அமைச்சு அறிவிப்பை வெளியிட்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக வாகன அனுமதிப்பத்திரம் முன்னதாக, பிலியந்தலை-வேரஹெரவிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் காரியாலயத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கையினால் வெளிநாட்டவர்களுக்கு நேர விரயம் உள்ளிட்ட பல சிரமங்கள் ஏற்பட்டிருந்தன.

குறித்த தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக 2 ஆயிரம் ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படும் நிலையில், உதவி செய்யும் போர்வையில் சில இடைத்தரகர்கள் 60 முதல் 100 அமெரிக்க டொலர் வரை வசூலிக்கும் செயற்பாடுகள் அதிகரித்ததுள்ளன. இது சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நாட்டின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.

நாட்டுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளில் அதிகமானவர்கள், எமது நாட்டின் இயற்கையை ரசித்து மகிழ்ச்சியாக அவர்களது விடுமுறை காலத்தை களிக்கவே வருகிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுவா பயணிகளில் அதிகமானவர்கள் சாதாரண தரத்தில் இருப்பவர்களாகும். அதனால் அவர்கள் தங்களின் கைகளில் இருக்கும் பணத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வருவதால், இடைத்தரகர்களின் செயற்பாடுகள், எதிர்காலத்தில் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இந்த சுரண்டலைக் குறைப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லை என்றார்.

No comments:

Post a Comment