எதிர்த்ததென்பது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது : அதிருப்தி வெளியிட்டுள்ள சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 23, 2025

எதிர்த்ததென்பது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது : அதிருப்தி வெளியிட்டுள்ள சுமந்திரன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சுமந்திரன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இன்று (23) வெளியிட்டுள்ள பதிவிலே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், “பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை. ஆனால் நீதிமன்றில் முன்வைத்த குற்றத்துக்காக ரணில் விக்ரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்ததென்பது, முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment