கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வுத்தரவை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று (08) வழங்கினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணியாற்றும் நரம்பியல் நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்ன கடந்த ஜூன் 18ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகளின் சட்ட பிரதிநிதிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதே வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களை ஜாமீனில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நரம்பியல் விசேட மருத்துவ நிபுணர் மஹேஷி விஜேரத்ன தம்மிடம் வரும் நோயாளர்களை தனியார் மருந்தகங்களுக்கு அனுப்பி அங்கு மருந்துகள், உபகரணங்களை கொள்வனவு செய்ய பணிப்புரை விடுத்தமை, முறைகேடாக வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment