பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று (03) பிற்பகல் நீர்கொழும்பு, துன்கல்பிட்டிய பகுதியில் பொலிஸ் வீதித் தடையில் நிற்குமாறு விடுத்த உத்தரவை புறக்கணித்துச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்துப்பாக்கி பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று காலை கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் காரில் இருந்த நபரை இலக்குவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவங்களுடன் தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment