முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட ஜயந்த கப்ரால், நவீன் வீரகோன் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மேல் நீதிமன்ற நீதியரசர் டபிள்யூ. கே.டி. விஜயரத்ன முன்னிலையில் இன்று (ஜூலை 3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் நிதிப் பிணையமும், ரூ.50 லட்சம் மதிப்பிலான ஐந்து பேர் உத்தரவாத பிணையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மூவருக்கும் வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாட்சியர்களுக்கு எந்தவித அழுத்தமும் அல்லது சொல்லிசெய்யும் முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என நீதியரசர் கடுமையான எச்சரிக்கை வழங்கியுள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment