ஹஜ், உம்ரா யாத்திரை தொடர்பில் புதிய சட்டம் : முகவர்களுக்கு நீதிமன்றம் ஊடாக தடை : உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை - நீதியரசர் ஏ.டப்ளியூ.ஏ. சலாம் குழு சிபாரிசு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

ஹஜ், உம்ரா யாத்திரை தொடர்பில் புதிய சட்டம் : முகவர்களுக்கு நீதிமன்றம் ஊடாக தடை : உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை - நீதியரசர் ஏ.டப்ளியூ.ஏ. சலாம் குழு சிபாரிசு

இலங்­கையில் ஹஜ் - உம்ரா யாத்­தி­ரைக்­கான ஏற்­பா­டு­களை மேற்கொள்­ளும்­போது ஏற்­படும் சிக்­கல்­கள் மற்றும் பிரச்சினைகளை தவிர்ப்­ப­தற்­கும் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்குமென புதிய சட்டமொன்றை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அரசாங்கம் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

இதன்­படி, ஹஜ் மற்றும் உம்ரா யாத்­தி­ரிகை­களின்போது மோச­டியில் ஈடு­படும் முகவர் நிறு­வ­னங்­களின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு 5 முதல் 10 வருட சிறைத் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்ற சிபா­ரிசு முன்வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஹஜ் மற்றும் உம்ரா யாத்­தி­ரைகளை ஒழுங்­கு­ப­டுத்தும் நோக்கில் ஹஜ் சட்­டத்­தினை வரை­வ­தற்­காக ஓய்­வு­ பெற்ற நீதி­ய­ரசர் ஏ.டப்ளியூ.ஏ.சலாம் தலை­மையில் குழு­வொன்று புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ரினால் கடந்த ஜன­வரி 27 ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்­டது.

இந்தக் குழுவின் உறுப்­பி­னர்­க­ளாக விஞ்­ஞான மற்றும் தொழி­நுட்ப அமைச்சின் செய­லாளர் வை.எல்.எம். நவவி, நீர்ப்­பா­சன அமைச்சின் மேல­திக செய­லாளர் எம்.பீ. லுதுபுர் ரஹ்மான், அரச ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹுழார், வக்பு நியாய சபையின் உறுப்­பி­ன­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஏ.ஏ.எம். இல்யாஸ், சட்­டத்­த­ரணி அக்ரம் வசீம், ஹஜ் நிதியம் தொடர்­பான வங்­கி­யா­ளரும் சிரேஷ்ட பணிப்பாளருமான சப்றி கௌஸ் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் உறுப்­பி­னர்­க­ளாக செயற்­பட்­டனர். இந்தக் குழுவின் செய­லா­ள­ராக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். ரயாஸ் பணியாற்­றினார்.

இந்த வரைபுக் குழுவின் இறுதி அறிக்கை செவ்­வாய்க்­கி­ழமை புத்தசா­சன, சமய மற்­றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் ஹினி­தும சுனில் சென­வி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

சுமார் 15 இலட்சம் ரூபா பணத்­தினை வைத்­தி­ருக்­கின்ற அனைத்து இலங்கை முஸ்­லிம்­களும் ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்றும் நோக்கி­லேயே வரைபுக் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக புத்­த­சா­சன சமய மற்­றும கலா­சார அலுவல்கள் அமைச்சின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் கூறினார்.

ஹஜ் மற்றும் உம்ரா யாத்­திரைகளின்போது மோச­டியில் ஈடு­படும் முகவர் நிறு­வ­னங்­களின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு 5 முதல் 10 வருட சிறைத் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்ற சிபா­ரிசு புத்தசாசன, சமய மற்­றும கலா­சார அலு­வல்கள் அமைச்­சிடம் முன்வைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மோச­டியில் ஈடு­ப­டு­கின்ற ஹஜ் மற்றும் உம்ரா முகவர் நிறுவ­னங்­களை நீதி­மன்­றத்தின் ஊடாகத் தடை­செய்­யவும் நடவடிக்கை எடுக்­கு­மாறு சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

அதே­வேளை, மலே­சியா மற்றும் இந்­தியா போன்ற நாடு­களில் செயற்ப­டு­வது போன்று ‘ஹஜ் மிஷன்’ இலங்­கை­யிலும் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகைகளை நிறை­வேற்­று­வ­தற்கு யாத்­த­ிரிகர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இந்த அறிக்­கையில் பிரேரிக்கப்­பட்­டுள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக ஹஜ் மற்றும் உம்ரா முக­வர்­க­ளுக்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­படும் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்கு துறைசார் நிபு­ணர்­களைக் கொண்ட சபை­யொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும்.

இச்­சபை உறுப்­பி­னர்­களின் தகை­மைகள் தொடர்­பா­கவும் இந்த அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, இந்த சபையின் சிபா­ரி­சுக­ளுக்­க­மைய நீதவான் நீதி­மன்­றத்தின் ஊடாக ஹஜ் மற்றும் உம்ரா முக­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்ட வேண்டும் எனவும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, இந்த வரைபு குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்­கட்­சி­யினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் விரி­வான கலந்துரையாடலொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக புத்­த­சா­சன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

அறிக்கை கையளிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்ளடக்கி ஹஜ் சட்ட மூலத்தினை தயாரிப்பதற்கு அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரத்தினை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment