ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுவோர் பட்டதாரிகளாக இருப்பதுடன், தொழிலில் இணைந்த பின்னர் இவர்கள் ஆசிரியர் பயிற்சி பெறுவது அவசியமென்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்வித் திட்டங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ள நிலையில் இவற்றை தெளிவூட்டும் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், தென் மாகாண கல்வித் திணைக்கள பிரதிநிதிகளுடன் நேற்றுமுன்தினம் (19) நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்ததாவது, பட்டதாரிகளே ஆசிரியர் தொழிலுக்கு உள்வாங்கப்பட வேண்டும். இத்தொழிலில் ஈடுபடுவோர் ஆசிரியர் பயிற்சியை பெற்றிருப்பதும் அவசியம்.
பாடசாலைகளில் நேரடியாக ஆசிரிய சேவையில் இணையும் பல பட்டதாரிகள் ஆசிரியர் பயிற்சி இல்லாதுள்ளனர். இதனால் நடைமுறைச் சிக்கல்கள் பல ஏற்படுகின்றன.
தற்போதைய கல்வி முறைகளில் குறைபாடுகள் உள்ளன. முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செய்வோம்.
இதற்காக கல்வி பேரவையை நிறுவ முன்மொழிந்துள்ளோம் என் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.
No comments:
Post a Comment