நாட்டிலிருந்து கடந்த மூன்றாண்டு காலப்பகுதிகளில் சுமார் 1,489 மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்தே இவர்கள் வெளியேறியுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது.
இதனால் அரசாங்கத்துக்கும், வரி செலுத்துவோருக்கும் 41.5 மில்லியன் டொலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்களின் வெளியேற்றமானது கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுகாதார உட்கட்டமைப்பை சீர்குலைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிலைமை முக்கியமான சிறப்புப் பிரிவுகளில் வெற்றிடங்கள் நிலவவும் வழிவகுத்துள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தைத் தளமாகக் கொண்ட சர்வதேச சுகாதார திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ சஞ்சிகை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment