முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 22, 2025

முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்ட ஷான் யஹம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெக்குணவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா ரூ. 2.5 மில்லியன் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இடம்பெற்று வரும் இலஞ்ச ஊழல் விசாரணைகளுக்கமைய அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment