அஸ்வெசும மேன்முறையீடுக்கான கால அவகாசம் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 22, 2025

அஸ்வெசும மேன்முறையீடுக்கான கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் ஜுலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன் இது தொடர்புடைய மேல்முறையீடுகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனைகளை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment