அரசாங்க சுற்றுநிருபத்தை மீறி மாணவர்களிடம் நிதி சேகரிப்பு : ஆராய்ந்து முடிவெடுக்க குழு - News View

About Us

About Us

Breaking

Monday, July 7, 2025

அரசாங்க சுற்றுநிருபத்தை மீறி மாணவர்களிடம் நிதி சேகரிப்பு : ஆராய்ந்து முடிவெடுக்க குழு

அரசாங்க பாடசாலைகளில் பல்வேறு உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பிரதிக் கல்வியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசாங்க பாடசாலைகளில் இவ்வாறு மாணவர்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் நடைபெறும் உற்சவங்களுக்காக அவ்வாறு மாணவர்களின் பெற்றோர்களிடம் நிதியைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என கல்வியமைச்சு ஏற்கனவே சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ள நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதனை ஆராய்வதற்காகவே குழுவொன்று நியமிக்கப்படுவதாகவும் எவ்வாறாயினும் அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களிடம் பல்வேறு நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment