கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவிப்பதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (09) அழைக்கப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேகநபரை ரூ. 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 2 மில்லியன் பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதி, சந்தேகநபர் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
மேலும், வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment