முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : சமர்ப்பித்த பிணை மனுவும் நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 14, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : சமர்ப்பித்த பிணை மனுவும் நிராகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹர நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் பிரசன்ன ரணவீர இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரசன்ன ரணவீர சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை ஆராய்வதற்கு மறுப்பு தெரிவித்து நீதவான் விளக்கமறியல் உத்தரவை நீடித்துள்ளார்.

கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்கு உரித்தான காணியொன்றை போலி உறுதிப்பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

பிரசன்ன ரணவீரவினால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை எதிர்வரும் 14ஆம் திகதி பரிசீலிப்பதற்கு நீதவான் திகதியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment