இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானில் 610 பேர் பலி - News View

About Us

Add+Banner

Tuesday, June 24, 2025

demo-image

இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானில் 610 பேர் பலி

WW05
ஈரான் மீது கடந்த 12 நாட்களாக இஸ்ரேலினால் மேற்கொண்ட தாக்குதல்களில் 610 பேர் கொல்லப்பட்டதாகவும் 4,746 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நாட்டு சுகாதார அமைச்சின் அண்மைய புள்ளி விவரங்களின்படி, 971 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 687 பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இரண்டு மாத குழந்தை, பதின்மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளனர். அத்துடன், இரண்டு கர்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட 49 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், ஐந்து சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் ஏழு வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன. இதில் ஆறு அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் நான்கு மருத்துவ சேவை நிலையங்கள் மற்றும் ஒன்பது அம்புயூலன்ஸ்களும் உள்ளடங்குவதாக ஈரான் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *