இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56,000 ஐ தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட 79 பலஸ்தீனியர்கள் காசா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போர் தொடங்கியதிலிருந்து இப்பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56,077 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 131,848 ஆக உயர்ந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் நடுப்பகுதியில் இஸ்ரேல் காசா போர் நிறுத்தத்தை மீறியதிலிருந்து 5,759 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 19,807 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vidivelli
No comments:
Post a Comment