(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட அனைவரும் தற்போது விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நன்கு அறிவார்கள். இதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவர் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பேசு பொருளாகக் காணப்பட்டது.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட அனைவரும் தற்போது விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நன்கு அறிவார்கள். கடந்த ஆட்சி காலங்களில் விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கையற்ற தன்மையே காணப்பட்டது.
கடந்த காலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இன்று சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் என்பன சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றன.
இந்த பேரழிவின் சூத்திரதாரிகள் யார் என்பது விரைவில் வெளிப்படுத்தப்படும். நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளாது விரைவில் இந்த உண்மைகள் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படும் என்று நம்புகின்றோம்.
சஜித் பிரேமதாச நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியியையும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பதவியையும் வகிக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்தளவுக்கு எதிர்க்கட்சி பிளவடைந்திருக்கவில்லை. உள்ளக ரீதியில் அவர்களாலேயே பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் அநாவசியமாக கவனம் செலுத்தாமல் நாம் எமது பாதையில் பயணிப்போம் என்றார்.
No comments:
Post a Comment