ஆணைக்குழுவாக மாறும் வீதி பாதுகாப்பு தேசிய சபை​ - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 20, 2025

ஆணைக்குழுவாக மாறும் வீதி பாதுகாப்பு தேசிய சபை​

வீதிப் பாதுகாப்பு தேசிய சபை​யை ஆணைக்குழுவாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீதிப் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தவும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக இதனூடாக நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் வீதிப் பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் குமார் ஜயரத்ன தெரிவித்தார்.

வீதிப் பாதுகாப்பு தேசிய சபையை ஆணைக்குழுவாக மாற்றும் போது தற்போதுள்ள பணிப்பாளர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 இலிருந்து 05 ஆக குறைக்கப்படும்.

நீதிக் கட்டமைப்பிற்குள் சட்டரீதியான கொள்கைகளை வகுப்பதன் மூலம் வீதிப் பாதுகாப்பிற்காக வினைத்திறனான நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் தேசிய சபையின் தலைவர் குமார் ஜயரத்ன தெரிவித்தார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment