சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவாருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் உறுதி - News View

About Us

About Us

Breaking

Friday, August 1, 2025

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவாருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் உறுதி

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவாருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்துள்ளார்.

கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட எல்லைப் புறக் கிராமங்களில் தொடர்தேர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக வயல் வெளிகள், நீரோடைகள் உள்ளிட்ட இடங்களில் இம்மண் அகழ்வுகள் உரிய அனுமதிப்பத்திரமின்றி இடம்பெறுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைவதோடு நீராடச் செல்வோர் உயிர் ஆபத்துகளையும் எதிர்நோக்குகின்றனர்.

குறித்த மண் அகழ்வில் பாரிய கனகர வாகனங்கள் ஈடுபடுத்தப்படுவதால் அவை எழுப்பும் ஒலிகளுக்குப் பயந்து காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுக்கின்றன. இதனால் இரவு வேளைகளில் பொதுமக்கள் நிம்மதியாக உறங்க முடியாத நிர்ப்பந்த நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

காலை வேளைகளில் குறித்த மண்ணை ஏற்றிக்கொண்டு பாரிய கனரக வாகனங்கள் இலகு வீதிகளில் பயணிப்பதால் எல்லைப் புறக் கிராமங்களில் காணப்படும் வீதிகள் யாவும் மிக மோசமான நிலையில் சேதமடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பொருத்தமற்றதாக மாறி வருகின்றன.

அத்தோடு குறித்த வாகனங்கள் மிக வேகமாக பயணிப்பதால் தொடந்தேர்ச்சியான விபத்துகள் ஏற்படுவதோடு எல்லைப் புறக் கிராமங்களில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களும் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனள்.

தவிசாளர் என்ற வகையில் இன, மதங்கள் பாராது பொறுப்புணவர்வோடு செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற ரீதியில் எதிர்காலத்தில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறும் பட்தத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மக்களோடு மக்களாக வீதிக்கு இறங்கி போராடவும் தான் தயார் எனவும் தவிசாளர் கருத்துத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment