அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தினால் அபராதம் : திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Friday, August 1, 2025

அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தினால் அபராதம் : திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி வெளியீடு

அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்கள் செலுத்த வேண்டிய அபராதம் தொடர்பாக திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மணித்தியாலத்திற்கு 100 முதல் 120 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 3,000 ரூபா அபராதமும், மணித்தியாலத்திற்கு 120 முதல் 130 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

GovPay செயலி மூலம் அபராத தொகையைச் செலுத்துகின்ற போதிலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கான திருத்தப்பட்ட அபராதக் கட்டணத்தின்படி, மணித்தியாலத்திற்கு 100 முதல் 120 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 3,000 ரூபாய் அபராதமும், மணித்தியாலத்திற்கு 120 முதல் 130 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

அத்துடன், மணித்தியாலத்திற்கு 130 முதல் 140 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 10,000 ரூபா அபராதமும், மணித்தியாலத்திற்கு 140 முதல் 150 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 15,000 ரூபா அபராதமும் அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, மணித்தியாலத்திற்கு 150 கிலோ மீற்றருக்கு அதிகவேகத்தில் வாகனம் செலுத்தப்படுமானால், நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment