“குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்)”சட்டமூலம் : உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்த சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 20, 2025

“குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்)”சட்டமூலம் : உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்த சபாநாயகர்

“குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அதற்கமையம், முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னர், சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்மானிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என உயர் நீதிமன்றம் கருதுவதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் அதன்படி, மனுதாரர் இந்த மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். 

அதன்படி, மனுவை மீளப் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து, மனு தொடர்பான எதிர்வரும் நடவடிக்கைகளை முடிவுறுத்தி அதனைத் தள்ளுபடி செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதன்படி, மனுவை மீளப்பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து, மனு தொடர்பான எதிர்வரும் நடவடிக்கைகளை முடிவுறுத்தி அதனைத் தள்ளுபடி செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். 

No comments:

Post a Comment