முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்.
எனவே, குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இதன் மூலம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, பிரதம நீதியரசர் முர்து பெனாண்டோ மற்றும் நீதியரசர் காமினி அமரசேகர ஆகியோரின் ஒப்புதலுக்கமைய, உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொடவினால் அறிவிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment