இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 8, 2025

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளரை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ.ஜயசுந்தரவின் சேவைக்காலம் 2025.05.06 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. 

அதற்கமைய, குறித்த பதவி வெற்றிடமான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு தற்போது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment