விசாரணைக் குழுவில் ஆஜராகிறார் தேசபந்து - News View

About Us

About Us

Breaking

Friday, May 16, 2025

விசாரணைக் குழுவில் ஆஜராகிறார் தேசபந்து

தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு கடந்த சில வாரங்களில் பாராளுமன்றத்தில் கூடி ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் 19ஆம் திகதி குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதற்கமைய அவர் அன்றையதினம் முதல் தடவையாக குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

இந்தக் குழு நேற்றும் (15) பாராளுமன்றத்தில் கூடி விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்துக் கலந்துரையாடியது.

இதற்கமைய இந்த விசாரணைக் குழு எதிர்வரும் 19ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை 8இல் கூடவுள்ளது.

No comments:

Post a Comment