நுவரெலியா கண்டி வீதியில் டொப்பாஸ் பகுதியில் குருநாகல் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நேற்று (23) இரவு 11.40 மணியளவில் விபத்திற்குள்ளானது.
பஸ்ஸில் பயணம் செய்த 23 பேரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் குருநாகல் பகுதியில் இருந்து பதுளை வலப்பனை ஹங்குரன்கெத்த நுவரெலியா பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டு வருகை தந்து தமது சுற்றுலாவை நிறைவு செய்து கொண்டு குருநாகல் நோக்கி பயணிக்கின்ற வழியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நுவரெலியா தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிர் சேதம் இல்லை என்பதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்ப முடியும் எனவும் விபத்திற்கு உள்ளான பஸ் தொடர்பான நுவரெலியா மாவட்ட போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகரின் முழுமையான அறிக்கை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில 20 பெண்களும், 3 ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment