பாசிக்குடாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து : ஒருவர் பலி : வைத்தியசாலையில் 12 பேர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 24, 2025

பாசிக்குடாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து : ஒருவர் பலி : வைத்தியசாலையில் 12 பேர்

கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பஸ்ஸில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவரின் உடல் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றர்.

No comments:

Post a Comment