மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை இளைஞர்கள் மீட்கப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பினால் (IOM) நேற்று (07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை அரசாங்கம், தாய்லாந்து மற்றும் மியன்மார் அரசாங்கங்களுடன் நடத்திய இராஜதந்திர நடவடிக்கையைத் தொடர்ந்து, இவர்களை மியன்மாரில் உள்ள சைபர் முகாமிலிருந்து விடுவித்து இலங்கைக்கு அழைத்து வர முடிந்தது.
இந்த 15 பேரும் மியன்மாரின் மியாவாடியில் உள்ள சைபர் முகாமில் இருந்து மீட்கப்பட்டு, எல்லையைத் தாண்டி தாய்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்கள் நேற்று (07) காலை 10.30 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து UL-403 எனும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை மியன்மாரில் இருந்து தாய்லாந்திற்கும், அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொண்டு செல்லும் பொறுப்பை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) ஏற்றிருந்தது.
அவர்கள் அனைவரும் நேற்று மாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment