கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் பெற்றோர் மற்றும் ஆர்வலர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த போராட்டம் காரணமாக, R.A. டி மெல் மாவத்தையில் (டுப்ளிகேஷன் வீதி) போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
கயவனால் உயிர் நீத்த மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம் என முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள் தர்மத்தை போதிக்க வேண்டும். அதர்மத்தை அல்ல. இன்று பாடசாலைகளில் உயிரிலும் மேலான ஒழுக்கம் இறந்துவிட்டது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment