இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில், அங்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியுள்ளதுடன், அந்த பகுதிகளில் இருந்த அபாய ஒலி ஒலிக்க தொடங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளுக்கு வர தொடங்கினர்.
உடனடியாக பொலிஸார் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினர் அந்த பகுதிக்கு விரைந்தனர். விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வோல்டன் வீதியில் 5 - 6 அடி ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பதாகவும், அந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான் எல்லையை மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment