கடன் அட்டை, வாகன பரிமாற்றம் : TIN இலக்கம் அவசியம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 27, 2025

கடன் அட்டை, வாகன பரிமாற்றம் : TIN இலக்கம் அவசியம்

கடன் அட்டையை பெறும்போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை கட்டாயமாக்குவதன் அவசியம் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி, வாகனத்தை பதிவு செய்தல், வாகனத்தை வேறொரு நபருக்கு மாற்றுதல், காணி பதிவு செய்தல், வணிகத்தை பதிவு செய்தல் மற்றும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை மாற்றுதல் ஆகியவற்றின் போது வரி எண் கட்டாயமாக இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு மே மாதம், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் உள்நாட்டு வருவாய் திணைக்களத்திடமிருந்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணை பெறவேண்டுமென அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

அந்த வர்த்தமானி அறிவிப்புக்கமைய, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் 18 வயது பூர்த்தியடைபவர்களும் கட்டாயமாக வரி எண்ணைப் பெற வேண்டும். 

இதேவேளை, 18 வயதை நிறைவு செய்த 10 மில்லியன் மக்களுக்கு வரி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 7 மில்லியன் பேர் வரி எண்களுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லை எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில் வரி எண்களைப் பெறுவதற்கு இந்த நாட்களில் அதிகளவில் மக்கள் வருகைத் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment