ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி? - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 16, 2025

ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி?

இந்​தி​யா​வில் உடல் பரு​மன் கொண்​ட​வர்​களின் எண்​ணிக்கை அதிகரித்து வரு​கிறது. 

2050ஆம் ஆண்​டுக்​குள் 44.9 கோடிக்​கும் அதி​க​மான இந்​தி​யர்​கள் அதிக எடை அல்​லது உடல் பரு​ம​னாக இருப்​பார்​கள் என்​றும் கணிக்கப்பட்டுள்​ளது. 

ஏற்​க​னவே, நகர்ப்​புறங்​களில் வசிப்​பவர்​களில் 5 இல் ஒரு​வர் உடல் பரும​னாக இருப்​ப​தாக ஆய்​வில் கண்​டறியப்​பட்டு உள்​ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்​கும் மோச​மான உணவு வகைகள், உடல் செயல்​பாடு இல்​லாமை ஆகிய​வற்​றால் குழந்​தைகளுக்​கும் உடல் பருமன் அதி​கரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் நாக்​பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்​திய அரசு வைத்தியசாலை​களி​லும், உணவுப்​ பொருட்​களில் இருக்​கும் எண்ணெய் மற்​றும் சர்க்​கரை அளவு​களை பட்​டியலிட்டு எச்​சரிக்கை பலகைகள் வைக்க மத்​திய சுகா​தார அமைச்​சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்​தி​கள் வெளி​யா​யின. ஆனால் இதற்கு மத்திய சுகா​தா​ரத்துறை அமைச்​சகம் மறுப்பு தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக மத்​திய செய்​தித்​துறை அமைச்​சகத்​தின் பத்​திரிகை தகவல் அமைப்​பு (பிஐபி) தனது எக்ஸ் தளத்​தில் கூறியுள்ளதாவது, சமோ​சா, ஜிலேபி, லட்டு போன்ற உணவு​களுக்கு எச்​சரிக்கை வாசகங்கள் வைக்​கு​மாறு மத்​திய அரசு நடத்​தும் கேண்​டீன்​களுக்கு எந்​த​வித உத்​தர​வை​யும் சுகா​தா​ரத்​துறை அமைச்​சகம் பிறப்பிக்கவில்​லை.

சுகா​தா​ரத்​துறை அமைச்​சகம் இது​போன்ற உத்​தர​வைப் பிறப்பித்துள்ள​தாக சில பத்​திரி​கை​களில் செய்​தி​கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்​தச் செய்​தி​களில் உண்மை இல்​லை. இவ்​வாறு பிஐபி தெரி​வித்​துள்​ளது.

No comments:

Post a Comment