ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழு (EU GSP+) நாளை (28) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) சலுகை வழங்கும் வர்த்தக நிபந்தனைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காகவே ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழு நாட்டுக்கு வருகை தந்து இந்த மதிப்பீட்டை மேற்கொள்கின்றது.
இந்த வருகையின்போது, ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழுவினர் இலங்கையின் அரசியல்வாதிகள், வணிக சங்கங்கள், அரச நிறுவனங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
No comments:
Post a Comment