நிபந்தனைகளுடன் இரத்து செய்தமைக்கு நன்றி : எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 9, 2025

நிபந்தனைகளுடன் இரத்து செய்தமைக்கு நன்றி : எதிர்க்கட்சித் தலைவர்

பராட்டே சட்டத்தை நிபந்தனைகளுடன் இரத்துச் செய்ய அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்தார்.

இன்று (09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ”கடன் பெறுநர்களால் மீள செலுத்தாமல் தவறவிடப்பட்ட கடன்களை அறவிடும் வகையில் அந்தக் கடனுக்கு பிணைப் பொறுப்பாக வங்கிக்கு ஈடுவைக்கப்பட்ட ஏதேனும் ஆதனத்தை பகிரங்க ஏல விற்பனை மூலம் விற்பனை செய்வதற்கு வங்கிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைளை நிபந்தனைகளோடு மேலும் இடைநிறுத்தும் தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய சபை அமர்வின் போதும் நான் சுட்டிக்காட்டியுருந்தேன். இதன் பொருட்டு அரசாங்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சட்டத்தை இடைநிறுத்துவதை போலவே, நிலுவைக் கடன் தொகைகளை கட்டாமையால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கும் கடன் மறுசீரமைப்பைச் செய்வதோடு, செயல்பாட்டு மூலதனத்தை வழங்கி, இந்தத் தொழிற்துறைகளை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறும்” தெரிவித்தார்.

No comments:

Post a Comment