அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி ! நாளை இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 9, 2025

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி ! நாளை இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு பிரச்சினை மற்றும் இலங்கை மீதான அதன் தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளையதினம் (09) ஜனாதிபதி செயலகத்தில் கூட்டத்தை கூட்டவுள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாட வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நடைபெறவுள்ளதாக கூறப்படும் இந்த கூட்டம் தொடர்பில், ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இலங்கை உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த புதிய வரிகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment