மருத்துவத் தொழிலுக்கான குறைநிரப்புத் தொழில்களின் சேவைகளான மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் (இயன்முறை மருத்துவவியலாளர்) பதவிக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான (2024) போட்டிப் பரீட்சையை, எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பரீட்சைக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம் II ) சாமிகா எச். கமகே இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.
விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை உரிய அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் போட்டிப் பரீட்சைக்கு 600 இற்கும் மேற்பட்ட தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் உள்ளதோடு, பரீட்சை மையங்களாக கொழும்பு தாதியர் கல்லூரி, கந்தானை தாதியர் கல்லூரி, கொழும்பு முதுகலை தாதியர் கல்லூரி, காசல் வீதி பெண்கள் வைத்தியசாலை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் இணையத்தளம் www.health.gov.lk மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment