உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட மேலும் சுமார் 35 வேட்புமனுக்களை அங்கீகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர், நீதியரசர் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் முன்னிலையில் இது தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.
பிறப்புச்சான்றிதழ்களை சமாதான நீதவான் சான்றளித்தமை உள்ளிட்ட சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியன காரணமாக நிராகரிக்கப்பட்ட மேலும் சில வேட்புமனுக்களே இவ்வாறு மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு அந்தந்த தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் இது தொடர்பில் மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment